மகாசிவராத்திரி வைத்து விளம்பரம் தேடும் தி.மு.க

Update: 2022-02-27 17:15 GMT

அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்படும் இருக்கும் மகா சிவராத்திரி விழா பின்னணியில் தி.மு.க'வின் நாத்திகம் மற்றும் விளம்பரம் அப்பட்டமாக வெளிவந்துள்ளது.


சமீபத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பகிரப்பட்ட விளம்பரத்தில் வரும் மார்ச் 1'ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழக அரசு மகாசிவராத்திரி விழா எடுப்பது இதுவே முதல் முறையாகும், இந்த விழாவில் இசை, சிவதரிசனம், ஆன்மீக விவாதங்கள் போன்றவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த போஸ்டரில் இந்து சமய அறநிலைத்துறை "மகாசிவராத்திரி விழா" என அச்சிட்டு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் இந்து மதத்திற்கு மதத்தை விமர்சனம் செய்து அடிக்கடி கருத்துக்கள் கூறிவந்தது குறிப்பிடதக்கது. மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் படமும் இடம்பெற்றுள்ளது.


எனினும் "வரலாற்றில் முதன்முறையாக" என அச்சிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது, ஆனால் இந்த விழாவை பயன்படுத்தி தி.மு.க தனது கட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் விளம்பரம் செய்ய முயற்சிக்கிறது அப்பட்டமாக தெரிகிறது.


குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க'வின் வெற்றிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது இந்துக்கள் வாக்கு வங்கி, இதனை கருத்தில் கொண்டு தி.மு.க இந்துக்களுக்கு எதிரி அல்ல என்ற விளம்பரத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நோக்குடன் இந்த விழா எடுப்பதாக தெரிகிறதே தவிர இதில் இந்து மதம் தழைத்தோங்க வேண்டும் இந்து மத வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற எந்த ஒருவித நோக்கமும் இல்லை என்பதும் தெரிகிறது.



Source - The Commune

Similar News