"நான் இயங்க மண்டைக்காடு பகவதி அம்மனின் அருளே காரணம்" - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Update: 2022-02-28 09:00 GMT

"நான் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகவும் கடமைகளை செய்து வருவது பகவதி அன்னையின் அருளால் தான், நான் அரசு கடமையை செய்வதற்கு அன்னை எனக்கு அருளிய சக்தியே காரணம்" என மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் அனைத்து நாட்களிலும் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் இந்து சமய மாநாடு நடைபெறும் நேற்று தொடங்கிய 85வது சமய மாநாட்டை துவக்கி வைத்து பேசினார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.


அப்போது பேசிய அவர் கூறியதாவது, "நான் இங்கு கவர்னராக வரவில்லை அன்னை பகவதி மகளாய் தான் வந்துள்ளேன், நான் தெலுங்கானா ஆளுநர் ஆகவும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஆகவும் அரசின் கடமைகளை செய்வது பகவதி அன்னையின் அருளால் தான் நான் அரசு கடமையை செய்வதற்கு அன்னை எனக்கு அருளிய சக்தியே காரணமாகும். அன்னையை நான் பின்பற்றி வாழ்ந்தால் நான் இயங்குகிறேன்" என்றார்


மேலும் பேசிய அவர், "கொரோனா இன்னும் தீரவில்லை கொரோனா தொற்று தீரும் வரை அனைவரும் முககவசம் அணிய வேண்டும் இது தற்காப்பு தான். இப்பொழுது இந்தியாவில் 120 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, ஐதராபாத்தில் உள்ள பயோடெக் விஞ்ஞானிகள் ஊக்கம் அளித்ததால்தான் இந்த அளவுக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு தடுப்பூசியை இந்தியா தயாரிக்க முடிந்தது அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன்" என்றார்.


Source - Junior Vikatan

Similar News