அடுத்த பிரதமர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத்தா? அமித்ஷா கூறியது என்ன?

Update: 2022-03-01 12:15 GMT

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்கால பிரதமர் வேட்பாளராக வருவதற்கான வாய்ப்புகள் பற்றி கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் யோகி ஆதித்யநாத் அவர்களை பிரதமர் வேட்பாளர்களாக மையப்படுத்தி சில கருத்துக்கள் நிலவி வருவதை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அமித்ஷா கூறியதாவது, "இயற்கையாகவே பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கீழ் இவ்வளவு பணிகள் நடந்துள்ளன, உத்திரபிரதேச மாநிலம் வளர்ச்சியை பெற்றுள்ளது என்றால் அதற்கு யோகி தான் காரணம் என்றார். அப்பொழுது அமித்ஷா யோகிதான் பிரதமர் வேட்பாளரா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

மேலும் பேசிய அவர், "உத்திர பிரதேசத்துக்கு 30 மருத்துவக்கல்லூரிகள் கிடைத்துள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று உள்ளதா என்பதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். மாநிலத்தில் 27 மருத்துவமனைகள் உள்ளன, பா.ஜ.க அரசு மேலும் 10 புதிய பல்கலைக்கழகங்களை கட்டியுள்ளது. 77 புதிய கல்லூரிகளை திறந்துள்ளது" என்றார் உள்துறை அமைச்சர்.

ஆனால் யோகி ஆதித்யநாத் பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு அவர் மறுக்காமலும், ஒப்புக் கொள்ளாமலும் சமமாக பதிலளித்தது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் முதல்வர் என்ற அந்தஸ்து இல்லாமல் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணிக்கு எதிராக திரண்ட போனது மோடி அலை வீசியது அதனால் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது தற்பொழுது யோகி ஆதித்யநாத்தான் உத்திர பிரதேசத்தின் மொத்த பெயராக உருவெடுத்துள்ளார், அவர்தான் அடுத்த பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து பலரிடமும் நிலவ காரணம்.

Source - Opindia.com

Similar News