அரசு அலுவலகமாக அல்லது கட்சி ஆபிசா என்ற சந்தேகத்தை வரவைக்கும் அளவிற்கு மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பலர் கட்சி ஆபிஸ்க்கு தவறுதலாக வந்துவிட்டோமா என்று பேசி வருகின்றனர்.
சென்னை, அண்ணா சாலையில் மின் வளாகம் அமைந்துள்ளது. அங்கு மின்வாரிய தலைமை அலுவலகம் மற்றும் மின்சாரத்தை பிரித்து அனுப்பும் டிரான்ஸ்பர்மர் உட்பட பல மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனிடையே அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பலர் மின்சாரம் பிரித்து அனுப்பும் கட்டடம் மற்றும் பல அரசு கட்டடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்களை திமுகவினர் ஒட்டியுள்ளனர். மற்றும் திருமண நாள் என்றாலும் போஸ்டர் அச்சடித்து அதனை அரசு கட்டிடங்களில் ஒட்டுவதை திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு கட்டிடத்தைகூட அரசியல் கட்சியினர் விட்டு வைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்னர் சாலைகள் மற்றும் பொது இடங்களிலும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தற்போது அரசு கட்டிடங்கள் மீது ஒட்டப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar