உக்ரைனை விட ரஷ்யாவில் பன்மடங்கு இந்தியர்கள் உள்ளனர்: ஊடகங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்!
உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்தி வரும் சமயத்தில் நேற்று (மார்ச் 1) இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. இதனை இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகின்றது. இது போன்று சித்தரிப்பதால் பல இந்திய மாணவர்களின் நிலைமை பற்றி இங்குள்ள பெற்றோர்கள் கவலை அடைய செய்யும். எப்போதும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது அனைவருக்கும் பொருந்தும். போர் பதட்ட நேரத்தில் ஊடகங்களும் சரியாக செயல்பட வேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும்.
இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; உக்ரைனிலிருந்து ஒரு மாணவர் நேரலையில் பேசியது உண்மையாக இருந்தாலும், போர் பதட்டம் நிறைந்த இந்நேரத்தில் இது போன்ற ஒளிபரப்பை செய்வது, எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்று தொலைக்காட்சிகள் சிந்திக்க வேண்டும்.
உக்ரைனிலிருந்து ஒரு மாணவர் நேரலையில் பேசியது உண்மையாக இருந்தாலும், போர் பதட்டம் நிறைந்த இந்நேரத்தில் இது போன்ற ஒளிபரப்பை செய்வது, எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்று தொலைக்காட்சிகள் சிந்திக்க வேண்டும்.
— Narayanan Thirupathy (@Narayanan3) March 2, 2022
உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை(2/12)
உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இரு நாடுகளும் பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், போர் தீர்வு அல்ல என்பதையும் இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. பல அரசியல் அமைப்புகள், விமர்சகர்கள் மற்றும் சில ஊடகவியலாளர்கள், உக்ரைன் விவகாரத்தில், இந்தியா யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள்.