உக்ரைனுக்கு செல்ல வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில் அவர்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 10வது நாளாக குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால் அங்குள்ளவர்களை மீட்பது என்பது இந்திய வெளியுறவுத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இருந்தபோதிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளது.
அதே போன்று தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கிடையில் திமுக எம்.பி.க்கள் என்ற குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்து அவர்களுக்கான பயண செலவு என்று தமிழக அரசு சார்பில் மூன்று கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கினார். இது போன்று மற்ற மாநிலங்கள் எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. மாணவர்களை மீட்பது மத்திய அரசு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழகத்தில் இது போன்ற செயல்களால் மற்ற மாநிலங்கள் பார்த்து சிரிக்கும் நிலைமை ஆகியுள்ளது.
இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் மிக தீவிரமாக நடைபெறுவதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்படுவர். எனவே உக்ரைன் அண்டை நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: Twiter