உக்ரைன் மாணவர்கள் மீட்பு விவகாரத்தில் மலிவு அரசியல் செய்யும் தி.மு.க

Update: 2022-03-06 14:45 GMT

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் இந்திய மாணவர்களை மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது தி.மு.க தனது விளம்பரத்தை புகுத்த அவ்வப்போது முயற்சித்து வருகிறது, அதன் சாயமும் இப்போது வெளுத்து வருகிறது.


தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிமாநிலங்களில் இருந்து வெளியேறும் மாணவர்களும் விட தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சரவணன் கூறுகையில், "வட இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு மற்றவர்களைவிட முன்னுரிமை அளித்து வருவதாக" கூறினார். ஆனால் தி.மு.க செய்தி தொடர்பாளர் இந்த செயலுக்கு எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. இதன் மூலமாக உக்ரேனில் இருந்து இந்திய அரசு மீட்கும் மாணவர்களை வைத்து தி.மு.க அரசியல் செய்ய முற்படுகிறது என்பது தெளிவாகிறது.


உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பும் தமிழக அரசின் முடிவை தெரிவித்த அவர் உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இந்தியில் பேசுவதாகவும் கூறினார்.


தி.மு.க'வால் திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்த ஆபத்தான நிரூபிக்கப்படாத கருத்துக்களால் தமிழ்நாட்டை சேர்ந்த சில மாணவர்களும் இது போன்று கூற ஆரம்பித்துள்ளனர். இந்திய அரசாங்கம் வட இந்திய மாணவர்களை மட்டும் முன்னுரிமை அளித்து வருவதாக சில மாணவர்கள் கூறினர், மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சில இடதுசாரி ஊடகவியலாளர்களும் தற்போது நடைபெற்று வரும் வெளியேற்ற நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.


மேலும் உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு தவறி விட்டதாகவும் தி.மு.க ஆதரவு ஊடகங்கள் மக்களிடையே தவறாக தகவலை பரப்புகின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு தலையிட்டு அதன் காரணமாகத்தான் உக்ரைனிலிருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வரப்படுகிறார்கள் எனவும் மக்களிடையே செய்தியாக பரப்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் மாணவர்களும் மத்திய அரசால் மீட்க்கப்படுகிறார்கள், ஆனால் அந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள் யாவும் இதுபோல் மத்திய அரசை குறை கூறி அரசியல் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க மட்டுமே இது மாதிரி மலிவுவிலை அரசியல் செய்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக தமிழக அரசின் நடவடிக்கையை வைத்து பார்க்கும் பொழுது இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு கருத்து என்பது போல் தோன்றுகிறது. கடந்த மார்ச் 3'ம் தேதி அன்று ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், 'உக்ரைனில் இருந்து வெளியேற்றப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும்' அவர் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.


அந்தக் கடிதத்தை தொடர்ந்து தமிழகத்தின் சில இடதுசாரி ஊடகங்களும் சமூக வலைதளங்களில் மத்திய அரசு தமிழக மாணவர்களை மீட்பதில் பாரபட்சம் காட்டுகிறது, தமிழக மாணவர்களை விட வட இந்திய மாணவர்களை மீட்பதிலேயே குறியாக உள்ளது எனவும் மார்ச் 3 தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதத்திற்கு பிறகு இதுபோல் கூற்றை மக்களிடையே பெரும்பாலும் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு மாணவர்கள் மீட்பு விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழி போட்டு அதில் அரசியல் செய்து குளிர் காயலாம் என நினைப்பதும் சமீபகாலமாக தெரிய வருகிறது. மத்திய அரசு மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் மாநிலங்கள் வாரியான எந்த ஒரு பிரிவினையும் வைத்து மீட்கவில்லை, சிக்கிய மொத்த மாணவர்கள் எத்தனை பேர் அதில் மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற கணக்கில தான் மத்திய அரசு கவனத்தில் வைத்து மீட்டு வருகிறது ஆனால் இந்த இக்கட்டான சூழலிலும் கூட எப்படி மத்திய அரசின் மீது ஒரு குறையை தெரிவித்து அதில் அரசியல் செய்யலாம் என்பது தி.மு.க'வும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் கருத்துக்களை பரப்புகிறது என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.



Source - OpIndia.com

Similar News