பெண் மேயரை வற்புறுத்தி, அமைச்சர் காலில் விழவைத்த தி.மு.க. எம்.எல்.ஏ! இதுதான் நீங்கள் வளர்த்த சுயமரியாதை இயக்கமா?

Update: 2022-03-07 02:38 GMT

தாம்பரம் மாநகராட்சியில் வசந்திகுமாரி கமலக்கண்ணன் என்ற 25 வயதுடைய இளம் பெண், மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவரை தி.மு.க எம்.எல்.ஏ., ராஜா என்பவர் "அமைச்சர் தாமோதரன் காலில் விழுமா.." என்று கட்டாயப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. இதனால் மறைமுகத் தேர்தலில் மாநகராட்சிகளையும் பிடித்தது. அதன்படி கடந்த 4ம் தேதி மேயர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று தாம்பரம் மாநகராட்சியிலும் மேயராக வசந்திகுமாரி கமலக்கண்ணன் என்ற இளம் பெண்  பொறுப்பேற்றுக்கொண்டார்.

அந் நிகழ்ச்சியில், அமைச்சர் தாமோதரன் மற்றும் எம்.எல்.ஏ., ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பதவியேற்றுக்கொண்ட பெண் மேயர் எம்.எல்.ஏ., ராஜா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதனால் பதறிப்போன எம்.எல்.ஏ "ஏம்மா அமைச்சர் இருக்கிறார் அவர் காலில் விழுமா" என்று பென் மேயரிடம்  கூறினார்.


இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருப்பதை பார்த்த அமைச்சர் "அய்யய்யோ வீடியோ எடுக்கிராங்கப்பா காலில் விழ வேண்டாம் " என்று பேசுகிறார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்கள் கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுயமரியாதை  இயக்கம் என்று சொல்லிக்கொண்டு காலில் விழவைப்பது என்பது என்ன மாதிரியான இயக்கம் என பொதுமக்கள் பேசிவருகின்றனர்.

Source, Image Courtesy: Behindwoods

Tags:    

Similar News