தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனமான ஆவினில் நெய், தயிர் உட்பட பொருட்களின் விலையேற்றியதால் விடியல் ஆட்சியை நோக்கி செல்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சும்மா பெயருக்கு பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இதனால் தமிழகம் விடியலை நோக்கி செல்கிறது என்று ஊடகத்தை வைத்து திமுக கட்டமைத்து வந்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பொருட்களின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது. அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.30 வரையிலும் பால் பவுடர் ஒரு கிலோவுக்கு 100 ரூபாயும், தயிர் லிட்டருக்கு ரூ.6 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலையேற்றம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர், நெய் முதல் தயிர் வரை விலையை உயர்த்தியுள்ளது திமுக அரசு. இறுதியாக தமிழகத்தில் தற்போது விடியல் ஆட்சியை பெறுவது போன்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar