ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடன் பிரதமர் மோடி இன்று சுமார் 50 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மற்றும் தற்போதைய நிலை மற்றும் இந்திய பிரஜைகள் மீட்பு பணி நிலவரம் குறித்தும் இருவரும் உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியியிடன் மோடி இன்று காலை உரையாடினார், அதனைத் தொடர்ந்து இன்று மதியம் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் உக்ரேனில் இருந்து தனது நாட்டினரை பெரும்பாலும் மாணவர்களை வெளியேற்ற இந்தியா முழுவதுமாக முயற்சித்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் உரையாடினார்.
இதுவரை 15,900 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாணவர்களின் மீட்கும் நடவடிக்கையில் "ஆபரேஷன் கங்கா" திட்டத்தை கையிலெடுத்து மத்திய அரசு சீரிய முறையில் அமல்படுத்தி வருகிறது. போர் உக்கிரமாகி வரும் நிலையில் அங்குள்ள மாணவர்கள் அனைவரையும் மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் மோடியுடன் பிரதமர் மோடி பேசி மாணவர்களை சுமூகமாக மீட்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.