"நீங்கள் என்னை பார்ப்பது இதுவே கடைசி தருணமாக கூட இருக்கலாம்" - வீடியோவில் உருகிய உக்ரைன் அதிபர்
"என்னைப் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.
தற்பொழுது ரஷ்ய உக்ரைன் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் உக்ரைன் அதிபர் ஆகிய தொலைக்காட்சி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தபோது அவர் ரஷ்ய உக்ரைன் போர் நிலவரம் மற்றும் எதிர் கால சூழல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்பொழுத அவர் கூறியதாவது, "உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன்" என கூறினார்.
"அப்படி அறிவித்தால் உக்ரைன் மீது பறந்து வரும் ரஷ்ய விமானங்களை மற்ற நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்த முடியும்" எனவும் கூறி உள்ளார். "ஆனால் நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும் எனது கோரிக்கையை ஏற்க தயங்குகின்றன இதனால் மக்கள் அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள் அடுத்து என்ன நடக்கும் என நினைக்க முடியவில்லை" என கூறினார்.
மேலும் பேசிய அவர், "எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, இதுவே நீங்கள் என்னை பார்க்கும் கடைசி தருணமாக கூட இருக்கலாம், உலக நாடுகள் இனி இந்தப் போரை வேடிக்கை பார்க்கக்கூடாது எங்களுக்கு உதவ முன்வரவேண்டும் எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள். ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து எங்களுக்கு அதிக போர் விமானங்களை வழங்க வேண்டும் அப்படி கொடுத்தால் தான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்" என அந்த வீடியோவில் தெரிவித்தார்.