அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்காதீங்க: பா.ஜ.க. உத்தரவு?

Update: 2022-03-08 06:07 GMT

சசிகலாவிற்கு அதிமுகவில் சேர்த்து கொள்வதற்கு பாஜக மேலிடம் அனுமதி வழங்கவில்லை எனவும், அதனை புறக்கணிக்கும்படியும் அதிமுக தலைமையிடம் பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக தனியாக போட்டியிட்டு 25 சதவீத வாக்குகளை வாங்கியது. இதற்கிடையில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேனியில் அதிமுகவினர் தீர்மானம் போட்டனர்.

இதனால் கடந்த சில நாட்களாக சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். இது பற்றிய அறிக்கையை மத்திய உளவுத்துறை மூலமாக பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை பார்த்த பாஜக மேலிடம் அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அது போன்ற முடிவினை உடனடியாக புறக்கணிக்கும்படியும் அறிவுரை வழங்கியுள்ளது. சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் மட்டும்தான் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் மற்ற ஜாதிகளிடம் ஆதரவு இல்லை எனவும் அவர்களின் வாக்குகள் இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும்போது பலவீனத்தை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சசிகலா எந்த ஒரு தேர்தலிலும் தனது செல்வாக்கை நிரூபிக்கவில்லை. அதற்கு மாறாக தினகரன் கட்சி ஆரம்பித்து 2.5 சதவீத வாக்கு வங்கி வைத்துள்ளார். எனவே சசிகலாவிற்கு பதிலாக தினகரனை நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என பாஜக மேலிடம் அறிவுரை வழங்கியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Deccan Herald

Tags:    

Similar News