திருப்பதியில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு ஐந்து நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதியில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடத்தப்படும், மார்ச் 17ஆம் தேதி பௌவுர்ணமியை முன்னிட்டு வருகிற 13-ஆம் தேதி தெப்ப உற்சவத்தை தேவஸ்தானம் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவ விழா நடைபெறுகிறது திருமலையில்.
திருமலையில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது, தெப்ப உற்சவத்தின் முதல் நாள் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஊர்வலமும், இரண்டாம் நாள் ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று சுற்றுகளாக ஊர்வலம் நடைபெறும். மூன்றாம் நாள் முதல் ஐந்தாம் நாள் வரை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தெப்பத்தில் வலம் வர உள்ளார். நிறைவு நாளில் 17 சுற்றுகள் தெப்பத்தில் சுவாமி வலம் வர உள்ளார்.
இந்நிலையில் 5 நாட்கள் நடைபெறும் இந்த தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக திருமலா-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.