"நாங்களும் போராடினோம்" - கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்த்து வெறுத்துப்போன பிரியங்கா காந்தி
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது இது குறித்து பிரியங்கா காந்தி, "நாங்கள் போராடினோம் காத்திருந்து தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்" என விரக்தியுடன் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தல்களின் எண்ணிக்கை முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நேற்று இரவு ஐந்து மாநிலத் தேர்தல்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாகின, இந்த கருத்துக்கணிப்பில் உத்திரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க தலைமையிலான அரசு அமையும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோல்வியை தழுவும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து மீடியா கருத்துக் கணிப்புகளும் ஒருசேர இதைக்கூறினர்.
இதனால் ஏற்கனவே தேய்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் இன்னும் அதிகமாக தேய ஆரம்பித்து விடுமோ என்ற பயத்தில் பிரியங்கா காந்தி கூறியதாவது, "உத்தரபிரதேச தேர்தலில் பொறுத்த வரை எங்களால் முடிந்தவரை நாங்கள் போராடினோம், காத்திருந்து தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்" என்றார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது, "கருத்துக்கணிப்புகள் முக்கியமில்லை அது பா.ஜ.க வெற்றி பெற்றதாக காட்டட்டும், ஆனால் உத்தர பிரதேச தேர்தலில் பெரும்பான்மையாக நாங்கள் தான் வெற்றி பெறுவோம். சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி கட்சிகள் 300'க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்" எனக் கூறினார்.