மதுரை: பாலியல் சித்ரவதையால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு பா.ஜ.க. சார்பில் நிதியுதவி!
பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட மதுரை சிறுமியின் குடும்பத்திற்கு பாஜக வர்த்தகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட மதுரை சிறுமியின் குடும்பத்திற்கு பாஜக வர்த்தகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் வைத்து கொன்ற நாகூர் அனிபா என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் குற்றத்திற்கு உதவிய இன்னும் பலர் கைது செய்வதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுமியின் மரணம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,, இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தாரின் நிலையை உணர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் சேலம மாநகர் மாவட்ட பாஜக வர்த்தகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சார்பாக மதுரையில் உள்ள சிறுமியின் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் சபரியை சந்தித்து ஆறுதல் கூறினர். அதன் பின்னர் அவரிடம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.
Source, Image Courtesy: Facebook