தோல்வியா அது கிடக்கு! - 'நெட்ப்ளிக்ஸ்'ல் என்ன பார்க்கலாம்? கவலையில் கார்த்தி ப.சிதம்பரம்

Update: 2022-03-10 10:00 GMT

காங்கிரஸ் கட்சி இதுவரை சந்திக்காத மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் வேளையில் தமிழக காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் 'நெட்ஃபிக்ஸ்' தளத்தில் பார்ப்பதற்கு ஏதேனும் சிறந்த படத்தை பரிந்துரை செய்யுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.


நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவியது, மொத்தமுள்ள 690 இடங்களில் 10 சதவீத இடத்தை கூட பெற முடியாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது, அகில இந்திய அளவில் ஒரு காலத்தில் அனைத்து மாநிலங்களையும் ஆண்ட கட்சி என்ற பெருமையில் இருந்த காங்கிரஸ் தற்போது இந்தியாவில் வெறும் இரண்டே மாநிலத்தில் மட்டும் ஆளும் அவல நிலையை எட்டியுள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க'வின் நிழலில் இளைப்பாறும் காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் கட்சியை பற்றி துளியும் கவலை இல்லாமல் இருக்கின்றனர். இன்றைய தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தின் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் எம்.பி'யுமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.




 


அதில் அவர், "இப்பொழுது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்ப்பதற்கு ஏதேனும் படம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்" என கேட்டுள்ளார். என்னதான் இதனை விளையாட்டு என எடுத்துக் கொண்டாலும் தேசிய அளவிலான கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் பொழுது இங்கு கோஷ்டி அரசியல் செய்து பழக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் எம்.பி இதுபோல் ட்விட் செய்தது தமிழக காங்கிரஸார் பலருக்கு பிடிக்கவில்லை, இப்படி இருந்தால் எப்படி காட்சி வளரும் என்று ஒருமித்த குரலாக கேட்கின்றனர்.

Similar News