காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்த மேயர் பிரியா ராஜன் - 'கிரிப்டோ கிருஸ்துவர்' என்ற அடையாளத்தை மறைக்கவா?

Update: 2022-03-11 10:30 GMT

சென்னையில் காளிகாம்பாள் கோவில் தரிசனத்திற்கு சென்று மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தரிசனம் செய்துள்ளார், இந்நிலையில் ஏற்கனவே அவர் மீது உள்ள 'கிரிப்டோ கிறிஸ்துவர்' என்ற பிம்பத்தை மாற்றுவதற்காக தரிசனம் செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி பெண் வேட்பாளராக ஒதுக்கப்பட்டது அதில் பிரியா என்கின்ற பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சென்னை மாநகராட்சியில் இளம் வயது பெண் மேயர் என்று மீடியாக்களால் பெரிதும் புகழப்பட்டவர் சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்றவுடன் கிறிஸ்தவ மத போதகர் எஸ்ரா சற்குணத்திடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினார்.






 


 


அதன்பிறகு தான் அவரின் உண்மையான பிம்பம் வெளிப்பட ஆரம்பித்தது, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் கிரிப்டோ கிறிஸ்துவராக வாழ்ந்து வந்ததுதன் உண்மையான முகம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன, பட்டியல் இன மக்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தை கிரிஸ்துவர் ஆக்கிரமித்து உள்ளார் என்ற சர்ச்சைகளும் எழுந்த நிலையில் இன்று அவர் காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.




 


சென்னை பாரிஸ் உள்ள காளிகாம்பாள் கோவிலில் அவர் தரிசனம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது தன்மேல் உள்ள 'கிரிப்டோ கிறிஸ்துவர்' என்ற பிம்பத்தை மாற்றுவதற்காக அவர் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது?

Similar News