தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த யோகி ஆதித்யநாத் - வரலாற்றுச் சம்பவங்கள்
தமிழர்களுக்காகவும், தமிழர் நலனுக்காகவும், உலகில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு தொடர்ச்சியாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குரல் கொடுத்துள்ளார் என்பது தற்போது வரலாற்றுச் சம்பவங்களை திருப்பிப் பார்க்கும்போது தெரிகிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க பெரும்பான்மையான வெற்றி பெற்று மீண்டும் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக அங்கு பொறுப்பேற்கிறார், இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து தமிழகத்தில் சிலர் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து குரல் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட பொழுது பாராளுமன்றத்தில் அதற்காக குரல் எழுப்பியவர் யோகி ஆதித்யநாத். மலேசியாவில் உள்ள இந்திய இனத்தவர்களின் அமைதியின்மை விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பியது, ஆனால் அப்பொழுது நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இந்த பிரச்சினையை விவாதிக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் கீழ் அவை நடவடிக்கைகளை முடக்கி வைப்பதற்கு முன்வந்தனர். அப்பொழுது அதற்கு பதிலாக "நாங்கள் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு, நாங்கள் வேற எந்த நாட்டையும் பற்றி விவாதிப்பதில்லை" என சட்டர்ஜி கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத், "இந்த இனத்தை பாதுகாக்க மலேசிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மலேசியாவில் பல கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளது குறித்தும்" அப்பொழுது யோகி ஆதித்யநாத் பேசியது குறிப்பிடத்தக்கது. ஆளும் தி.மு.க'வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியாத பொழுது அப்பொழுதே சட்டமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் குரல் கொடுத்ததும் நினைவுகூறத்தக்கது.