கல்வியாளரும், ஆய்வாளருமான மீனா சுவாமிநாதன் மறைவு: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இரங்கல்!

Update: 2022-03-14 13:08 GMT

கல்வியாளரும், ஆய்வாளருமான மீனா சுவாமிநாதன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; கல்வியாளரும், ஆய்வாளருமான திருமதி. மீனா சுவாமிநாதன் அவர்களின் மறைவுச் செய்தியை அறிந்து வருந்தினேன். அவரது கணவரும் இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தையுமான திரு.எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News