கட்டுக்கட்டாக போக்குவரத்து துறையில் சிக்கிய லஞ்சப்பணம் - தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடு

Update: 2022-03-15 14:00 GMT

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 35 லட்சம் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் நிர்வாக பிரிவு துணை கமிஷனர் நடராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார், இவர் எந்த அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் ரகசிய கூட்டம் நடத்தி கண்காணிப்பாளராக பதவி உயர்வு அடைய வேண்டுமெனில் 5 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என பேசியதாக தகவல் வெளியானது. இதுபோல் மாநிலத்தின் வேறு இடங்களில் பணிபுரியும் போக்குவரத்து துறை கண்காணிப்பாளர்களிடம் 'நீங்கள் அதே இடத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் ஐந்து லட்சம் தரவேண்டும் இல்லையெனில் உங்களின் இருப்பிடத்திற்கும் பணியிடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்துக்கு மாற்றி விடுவேன்' என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.


இதில் அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பணமாக 35 லட்சம் இருந்ததை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர், இதையடுத்து அவர்கள் நடராஜனிடம் விசாரணை நடத்தியதில் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை நடராஜன் கவனித்து வருவது தெரியவந்துள்ளது, மேலும் பதவி உயர்வு வழங்கும் அளவுக்கு நடராஜனுக்கு இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லை இருப்பினும் நடராஜன் தனது உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வசூலித்ததாக அங்கு கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, இது பற்றிய முழு விரைவில் விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று தகவல் கிடைத்துள்ளது.


Source - Junior Vikatan

Similar News