அடிப்படை வசதிகள் வேண்டி மயிலாடுதுறையில் மாணவர்கள் போராட்டம் - உக்ரேன் மாணவர்களுக்கு குரல் கொடுத்த தி.மு.க எங்கே?

Update: 2022-03-16 12:15 GMT

மயிலாடுதுறையில் அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது, இந்த கல்லூரிக்கு என தனியாக ஒதுக்க இடம் ஒதுக்கப்படாத நிலையில் மாதிரிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகின்றனர்..


இந்நிலையில் கல்லூரி இயங்கும் கட்டிடத்தில் மாணவர்கள் தனித்தனி வகுப்பு அறையில் அமர்ந்து பயில்வதற்கு இடமின்றி இட நெருக்கடிக்கு சிக்கி ஆளாகின்றனர், மேலும் தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க அதை கண்டித்து இன்று வகுப்பறையில் புறக்கணித்து மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாலங்காடு மெயின் ரோட்டில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். உக்ரைனில் தவித்த மாணவர்களுக்காக குரல் கொடுத்து பெரிய அளவில் அரசியல் செய்த தி.மு.க தமிழகத்தின் ஒரு கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தர முன் வராதது குறித்து அப்பகுதி மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.



Source - ABP Nadu

Similar News