ரப்பர் கழிவு, பிளாஸ்டிக் போன்றவற்றிலிருந்து சாலை வசதிகள் - நிதின்கட்கரியின் தொலைநோக்குப் பார்வை

Update: 2022-03-16 12:30 GMT

"தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவை குறைக்க வேண்டும்" என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


இந்தியா உட்கட்டமைப்பு ஏற்பாடு செய்த "இந்தியாவில் சாலை மேம்பாடு" என்ற தலைப்பில் 17'வது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது, "ரப்பர் கழிவு, பிளாஸ்டிக் போன்ற பல்வேறு கழிவு பொருட்களை சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவதால் சிமெண்ட் மற்றும் இரும்பு மீதான தேவை குறைகிறது" என்றார்


மேலும் சாலை கட்டுமானத்தின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் டி.பி.ஆர் தயாரிப்பதற்கான கொள்கையை வகுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மெத்தனால், எத்தனால், பயோடீசல், எனர்ஜி மற்றும் எலெக்ட்ரிக் க்ரீன் ஹைட்ரஜன் ஆகியவை எதிர்காலத்திற்கான எரிபொருள் ஆகும் என்றார். கட்டுமான பொருட்கள் மற்றும் வாகன எரிபொருள்களுக்கு அதிக மாற்று மற்றும் போட்டியை நாடு உருவாக்க வேண்டிய நேரம் இது" எனவும் கட்கரி கூறினார்.


மாற்று வழிகளை ஊக்குவிப்பதில் மத்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை குறித்த சுட்டிக்காட்டிய அவர் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்திய அமைச்சர், மேலும் அனைத்து பங்குதாரர்களிடம் இருந்து கூடுதல் முயற்சிகள் தேவை எனவும் வலியுறுத்தினார்.


Source - Swarajya

Similar News