மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிதியை 'இனோவா' கார் வாங்க ஒதுக்கிய தி.மு.க. சேர்மேன்!

Update: 2022-03-18 01:06 GMT

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த தமிழ்செல்வி ஆவார். இவர் மக்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியை தனக்கு சொகுசாக போகிறதுக்கு இன்னோவா கார் வாங்குவதற்கு ஒதுக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் தமிழ்செல்வி கலந்து கொண்டார். அப்போது மொத்தம் உள்ள 14 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

இதனிடையே மார்ச் 11 உறுப்பினர்களின் கூட்டம் கூடியது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே பஞ்சாயத்து தலைவர் மீது சராமாரியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக உறுப்பினர் கனிமொழி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வியை சரமாரியான கேள்வியால் திக்குமுக்காட வைத்தார். அப்போது மக்களுக்காக செல்வு செய்ய வேண்டிய நிதியை உறுப்பினர்களுக்கு தெரியாமல் இன்னோவா கார் வாங்க ஒதுக்கியுள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஒரு கோடியே 77 லட்சத்தை முறைகேடாக ஒதுக்கியுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.

மேலும், மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கூட்டத்தில் உள்ள உறுப்பினர்களிடம் கலந்து பேசாமலேயே நிதியை உங்கள் இஷ்டத்துக்கு ஒதுக்கியுள்ளீர்கள். மக்கள் எங்களை பார்த்து ஏன் பணிகள் செய்யவில்லை என்ற கேள்வியை கேட்டால் நாங்கள் அவர்களுக்கு என்ன சொல்வது என்றும் கடுமையாக சாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Source, Image Courtesy: Nakkheeran

Tags:    

Similar News