இந்தியை எதிர்க்கும் தி.மு.க., அந்நிய மொழியான உருதுக்கு பள்ளி திறப்பு!

Update: 2022-03-18 08:50 GMT

தமிழகத்தில் அரசு பள்ளியில் மாணவர்களை இந்திப் படிக்க விடாமல் திமுக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதே சமயம் அந்நிய மொழியான உருதுவை ஆதரித்து அதற்காக பள்ளியும் திறந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சியில் திமுக அரசு உருது துவக்கப்பள்ளி என்று புதிதாக திறந்துள்ளது. இந்திய மொழியான இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அரசு அந்நிய மொழியான உருதுக்கு அரசு சார்பில் ஏன் ஆதரவு தெரிவித்துள்ளது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Full View

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில் எந்த மொழி வேண்டுமானாலும் கற்கலாம் என்று கூறியது. ஆனால் திமுக உடனே இந்தி மொழி திணிப்பு என்ற கருத்து சொல்ல ஆரம்பித்தது. விமான நிலையம், ஊரின் பெயர் பலலை போன்ற இடங்களில் இந்தி மொழி இருந்தால் உடனே எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என பொங்கும் திமுக தற்போது உருதுதுவக்கப்பள்ளி தொடங்கப்பட்டதற்கு ஏன் வாய் திறக்கவில்லை.

தமிழகத்தில் இந்திதான் இருக்கக்கூடாது மற்றபடி உருதுப்பள்ளிகள் இருக்கலாம். இங்கு உருது எல்லாம் சொல்லித்தரவில்லை வெறும் பெயர் மட்டும்தான் உருதுதுவக்கப்பள்ளி என்றால், அப்போ சமஸ்கிருத பள்ளி என்றோ, அல்லது பிராமணர் பள்ளி என்று இருந்தால் தவறு இல்லைதானே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source, Image Courtesy: Thamarai Tv

Tags:    

Similar News