தொலை நோக்கு திட்டம் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' உள்ளது: தி.மு.க. மீது அண்ணாமலை பாய்ச்சல்!
திமுக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை எனவும் பகல் கனவாக அமைந்துள்ளது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 'இன்றும்' நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது.
மேலும், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வியினை பயிலும்போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்' செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter