பங்குனி உத்திரம், நல்ல நேரத்தில் காலம் பார்த்து பட்ஜெட் துவக்கிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

Update: 2022-03-18 12:15 GMT

தமிழக நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை பவுர்ணமி, பங்குனி உத்திரம் நாளில், நல்ல நேரத்தில் தாக்கல் செய்துள்ளார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.


2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இன்றைய தினம் பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். உரையை இன்று வெள்ளிக்கிழமை ஆகையால் 9 மணி முதல் 10:30 நல்ல நேரத்தில் ஆரம்பித்து துவக்கினார், மேலும் இன்று பங்குனி உத்திரம் ஆகையால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.


திராவிர் கழக கொள்கைகள், கடவுள் மறுப்பு என வெளி உலகத்திற்கு தி.மு.க'வை சேர்ந்தவர்கள் தம்பட்டமடித்து வந்தாலும் தங்களுக்குள் காலம், நேரம், நாள் பார்த்துதான் செயல்களை துவங்குவர்! அது இன்றைய நிதி நிலை அறிக்கை தாக்கலின் போதும் நிரூபணமாகியுள்ளது.


Source - OneIndia.com

Similar News