"தி.மு.க'வினர் இன்னும் பதவியில் இருந்து விலக மாட்டேங்குறாங்க" - கதறும் கம்யூனிஸ்ட் கட்சியினர்
முதல்வர் சொல்லியும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களிலிருந்து இன்னும் தி.மு.க வினர் பதவி விலகாமல் இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க 13 கட்சிகள் கூட்டணியை வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கும். இதில் பல இடங்களில் தி.மு.க'வினர் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களை கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டு கைப்பற்றினர், இந்நிலையில் கோபமடைந்த முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கிய இடங்களை அவர்களுக்கு விட்டுத்தர வேண்டும் அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனாலும் ஸ்டாலின் பேச்சை கேட்காத தி.மு.க'வினர் இன்னமும் பல இடங்களில் பதவியில் தொடர்வதாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கோட்பாட்டுக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது, தமிழக முதல்வர் ஆக்கபூர்வமான அறிக்கை வெளியிட்டுள்ளார். கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கிய உள்ளாட்சி இடங்களை கைப்பற்றி அவர்கள் அந்த பதவியில் இருந்து விலகி விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார் ஆனாலும் சில இடங்களில் இன்னும் பதவி விலகாமல் நீடிக்கின்றனர் அந்த இடங்கள் அனைத்திலும் மீண்டும் கூட்டணி கட்சியினர் பதவிக்கு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.