பிரதமரின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ் மீண்டும் துவங்கும் சென்னை துறைமுகம்-மதுரவாயல் விரைவு சாலை திட்டம்

Update: 2022-03-19 12:15 GMT

பிரதமரின் கதி சக்தி (PGMS) திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட உள்ளது சென்னை துறைமுகம்-மதுரவாயில் விரைவுச்சாலை, முடங்கிக் கிடக்கும் இந்த திட்டமானது புதுப்பிக்க பிரதமரின் 'கதி சக்தி' (PGMS) திட்டத்தின்கீழ் உயிர்ப்பிக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.


5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்படும், இது மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே தொடர்பு ஏற்படுத்தும் எனவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18'ம் தேதி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் போது அறிவித்தார்.


அப்பொழுத அவர் கூறியதாவது, "இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது, இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும். இது 5,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை அமையும்" எனவும் தெரிவித்தார்.


இந்த வார தொடக்கத்தில் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் கூறியதாவது, "பிரதமர் கதி சக்தி திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயில் வரை உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை சாலை பணிகள் மேற்கொள்ளப் படுகிறது" என்பதை உறுதிப்படுத்தினார். கடந்த புதன்கிழமை மார்ச் 16'ம் தேதி அன்று மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டுஸ்ட்டரி ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பாலிவால் கூறுகையில், "ஒவ்வொரு அடுக்குகளிலும் இரண்டு பாதைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த நடைபாதையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துகிறது" என்றார்.


சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட சாலையானது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் 22 கிலோமீட்டர் உயர்மட்ட சாலை மூலம் கட்டப்பட்டு வருகிறது. பெங்களூர்-சென்னை விரைவு சாலை உடன் இது இணைகிறது. இந்த திட்டமானது மறைந்த முதல்வர் கருணாநிதியின் கீழ் தி.மு.க அரசால் 2019 செப்டம்பரில் துவங்கப்பட்டு வேலைகள் ஆரம்பமாயின, ஆனால் கூவம் ஆற்றின் கீழ் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று 2011'ம் ஆண்டு ஜெயலலிதா அரசு இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால் அப்பொழுது 18.3 கிலோ மீட்டர் அளவுக்கு சுமார் 20 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து என்பது குறிப்பிடத்தக்கது.


முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு NHAI மற்றும் மாநில அரசு இந்த திட்டத்தை புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தது, உயர்த்தப்பட்ட விரைவுச்சாலைக்கான புதிய திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை அப்போதைய மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்ரதாகிருஷ்ணன் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, திட்டத்தை நிறைவேற்ற NHAI புதிய திட்டத்தையும் தயாரித்தது.


NHAI விரைவில் வழிச்சாலையின் பணிகளை தொடங்க தயாராக உள்ளது, மேலும் முடிக்கப்பட்ட தூண்கள் அவற்றின் கட்டமைப்பு தற்போதைய வலிமை மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்தபிறகு பயன்பாட்டுக்கு வரும் என்பதை ஏற்கனவே உறுதியளித்துள்ளது. அறிக்கையின்படி கோயம்பேடு-கூவம் ஆற்றங்கரையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சேத்துப்பட்டில் கட்டப்பட்டுள்ள இரட்டை தூண்கள் பயன்படுத்தப்படும் இரண்டு மத்திய அரசின் ஆயுதங்கள் ஒன்று சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் இந்திய கப்பற்படை இவை இரண்டும் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட ஒப்புக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படி சென்னை கடற்படை, தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய மூன்று மத்திய அரசு துறைகள் மூலமாகவே சென்னை மதுரவாயல் திட்டம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source - Swarajya

Similar News