'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கட்டாயம் பார்க்கவேண்டிய படம் - அமீர்கான்

Update: 2022-03-21 13:00 GMT

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என நடிகர் அமிர்கான் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி அனுபம்கேர், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 1990'களில் நடந்த காஷ்மீர் பண்டிட் இன மக்களின் படுகொலையை தத்துரூபமாக திரையில் வடிவமைத்த காரணத்தினால் படம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாராட்டியுள்றனர். அமித்ஷா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகர் அமீர்கான் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்து அவரின் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது, "காஷ்மீர் திரைப்படத்தை நான் நிச்சயமாக பார்ப்பேன், இந்த மாதிரியான தலைப்புகளில் வெளிவருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும். இதன் கதை நமது வரலாற்றை பேசியுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப்படம் மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனதையும் மிக ஆழமாக தொட்டுள்ளது அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன்" என கூறியுள்ளார்.



Source - Maalai Malar

Similar News