நிலத்தை அபகரித்த தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரால் பெண் தீக்குளிக்க முயற்சி!
தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கொலை மிரிட்டல் விடுத்தும், நிலத்தை மீட்டுக்கொடுக்க வலியுறுத்தி பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுமதி, இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு ஓமலூர் அருகே உள்ள காளியாம்பட்டியில் 53 சென்ட் நிலம் குடும்ப சொத்தாக உள்ளது. இந்த நிலத்திற்கு சுமதியின் குடும்பத்தினர் 4 பேர் உரிமையாளராக உள்ளனர். தாயார் சித்தம்மாள், சுமதியின் அண்ணன் முருகேசன், அக்கா சாந்தி உள்ளிட்டோர் உரிமையாளராக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தலா 13 சென்ட் நிலம் பாதியமாக உள்ளது.
இந்நிலையில், சுமதியின் அண்ணன் முருகேசன் இறந்துவிட அவர்களின் மகன் மற்றும் மனைவி சேர்ந்து தங்களுக்கு பாதியமான நிலத்தை திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்கு விற்பனை செய்வதற்காக கிரயம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால் மொத்தம் நிலத்தையும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கிரயம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதற்கான ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்காக சுமதிக்கு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் தனது தாயுடன் சுமதி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்குள்ள போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். மேலும், திமுக பிரமுகர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தும், நிலத்தை அபகரித்தால் தீக்குளிக்க முயன்றேன் என பெண் வாக்குமூலம் அளித்தார்.
Source, Image Courtesy: News J