"கண்டிப்பாக பொதுசிவில் கட்டாயம் வரும்" - உத்தரகாண்ட் பா.ஜ.க முதல்வர் புஷ்கர் உறுதி
'பொது சிவில் சட்டம் முக்கியமானது, அதை அமல்படுத்துவோம்" என உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது, அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ'க்கள் கூட்டம் உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராக கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், "நாங்கள் வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம். நாங்கள் மக்களுக்காக அழைத்து அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி உத்தரகாண்ட் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை திட்டத்தை வழங்கியுள்ளார், அவரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றவாறு செயல்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில முன்னணி மாநிலமாக மாற்றுவோம்" என்றார். மேலும், "பொது சிவில் சட்டம் முக்கியமானது அதனையும் அமல்படுத்துவோம்" எனவும் கூறினார்.