"எம்.பி'கள் பெயரைச்சொல்லி இனி பள்ளிகளில் இடம் கேட்க முடியாது" - மத்திய அரசின் அடுத்த அதிரடி
'இனி எம்.பி'யின் பெயரை சொல்லி பள்ளியில் இடம் கேட்க முடியாது' என்பது போன்ற அதிரடி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த தயாராக உள்ளது, இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு எம்.பி'யும் 10 மாணவர்களுக்கு பரிந்துரை செய்து சேர்க்க முடியும் என்ற திட்டத்தை இந்த கல்வியாண்டுடன் முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அரசியல் கட்சிகளின் மத்தியில் ஆலோசித்து உள்ளது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்.பி'க்கும் 10 இடங்கள் ஒதுக்கப்படும், அந்த பத்து இடங்களில் எம்.பி'க்கள் தங்களது தொகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட யாருக்கேனும் அந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க பரிந்துரைக்க முடியும்.
இந்நிலையில் எம்.பி'க்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்கள் போதவில்லை உயர்த்த வேண்டும் அல்லது எம்.பி'க்களுக்கு பள்ளியில் ஒதுக்கீடு இடங்களை தர வேண்டுமென கோரி காங்கிரஸ் எம்.பி மணீஸ்திவாரி நேற்று மக்களவையில் பிரச்சினையைக் கிளப்பினார்.
இதையடுத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கூறுகையில், "அனைத்து கட்சி தலைவர்களுடன் அமர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இதில் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு தேவையா அல்லது இந்த கல்வி ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரலாம்" என்பது குறித்து முடிவு எடுங்கள் என கூறினார்.
அதற்கு கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், "மக்களவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்.பி'களுக்கான ஒதுக்கீடு முறையை ரத்து செய்து விடலாம் என முடிவெடுத்து அதன்படி மத்திய அரசு செயல்படும். நம் மக்களின் பிரதிநிதிகள் சிலருக்கான பிரநிதிகள் கிடையாது பள்ளிக்கூடங்களில் எம்.பி'க்கான மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு முதலில் 2'ஆக இருந்தது பின்னர் 5'ஆக உயர்த்தப்பட்டது தற்போது 10'ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பள்ளிகளில் ஒரு எம்.பி'க்கு மாணவர்களுககு 10 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.