ஷரியா சட்டப்படி பெண்கள் படிக்கக்கூடாது - பெண் மேல்நிலைப் பள்ளிகளை மூட உத்தரவிட்ட தாலிபன்கள்
ஆப்கானிஸ்தானில் சிரியா சட்டத்தை பின்பற்றி பெண்களுக்கான பள்ளிகளை திறந்து நிலையில் கடந்த புதன்கிழமை மீண்டும் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகளை மூட உத்தரவிட்டு உள்ளது தாலிபன்கள் ஆட்சி.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக தாலிபன்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளனர், அவர்கள் வந்ததிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது மற்றம் தனியே வெளியே செல்வது போன்ற விஷயங்களில் கடும் கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர், மேலும் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சட்டமான ஷரியா சட்டத்தை பயன்படுத்தி பல கட்டுப்பாடுகளை ஆப்கானிஸ்தான் நாட்டில் விதித்தது குறிப்பிடத்தக்கது.
அப்படியிருந்தும் கடந்த செப்டம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டில் 6'ம் வகுப்பு வரையிலான சில பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி தலிபான்கள் ஆட்சி அனுமதி வழங்கியது, மேலும் பல்கலைக்கழகம் மற்றும் உயர் வகுப்புகளுக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 2022-ல் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட்டன மாதங்களுக்கு பிறகு மீண்டும் பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது ஆனாலும் இந்த உத்தரவு வாய் வழியாகவே இருந்ததே தவிர கடைப்பிடிக்கப்படவில்லை.
ஷரியா இஸ்லாமிய சட்டத்தின்படி பெண்கள் பள்ளிக்கு செல்லவோ அல்லது வீட்டிற்கு வெளியே வேலை செய்யவோ தடை விதிக்கப்பட்டது, தவிர அவர்கள் 'சாதாரி' எனப்படும் முழு மூடிய மேலாடைகளை அணியவும் வெளியில் செல்லும் போதெல்லாம் ஒரு ஆண் துணையின்றி செல்லக் கூடாது எனவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இதை மீறும் பெண்களின் கைகளை வெட்டுவது, பொது இடங்களில் வசைபாடுவது, மற்றும் விபச்சார குற்றச்சாட்டுகளை பெண்கள் மீது சுமத்தி கல்லெறிதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.