இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வரான பிறகு முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளார் என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வந்து தற்போது 10 மாதங்கள் ஆகின்றது இதுவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்ளவில்லை, இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார் இதற்காக நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட உள்ளார். அவருடன் தி.மு.க இளைஞரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி செல்ல உள்ளார்.
பின் அவர் டெல்லியில் இருந்து நான்கு நாள் பயணமாக துபாய் பயணம் மேற்கொள்ள இருக்கிறார், 192 நாடுகள் பங்கேற்கும் பல தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து சார்ஜாவில் உள்ள பல்கலைக் கழகம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது இதன் காரணமாகவே அவர் டெல்லி சென்று அங்கிருந்த துபாய் செல்கிறார் என்ற தகவலை தி.மு.க சார்பில் தெரிவித்துள்ளனர். மேலும் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்டாலின் வரும் 28'ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.