தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: தலித் பெண்ணிற்காக நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பேச்சு!

Update: 2022-03-24 12:08 GMT

திமுக ஆட்சியில் தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விருதுநகரில் பட்டியல் இனத்தின் பாமரப் பெண் ஒருவரை திமுக நிர்வாகி ஆபாச வீடியோ எடுத்து அதனை வைத்து நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் இதுவரை திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் இதன் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் விருதுநகரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த போராட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது; திமுக ஆட்சியில் பெண்களின் வாழ்விற்கு பாதுகாப்பு இல்லை எனவும், தமிழகத்தில் தின்தோறும் கோரமான செய்திகள் வெளிவருகிறது என்றார்.

மேலும் இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: கயமை செய்த திமுக கட்சியின் குற்றவாளி உட்பட அனைவருக்கும் கடுமையான தண்டனையும், காவல்துறையினருக்கு, ஆளும்கட்சி தலையீடு இல்லாத சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட,

பட்டியல் இனத்தின் பாமரப் பெண்ணுக்கு,

பரிவுடன் நீதிகேட்டு பாஜகவின் போராட்டம்!

விருதுநகர் வீதிகளில் வீரமாய்

மக்கள் கூட்டம்,

எங்கு திரும்பினாலும் எழுச்சிமிகு கோஷங்கள்,

மகளிருக்கான போராட்டத்தை

மகத்தான வெற்றி பெற செய்த

மக்களுக்கு நன்றி... இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News