பிர்பூம் கலவர வழக்கை சி.பி.ஐ'க்கு மாற்ற குறுக்கே நின்ற மம்தா - குட்டு வைத்த நீதிமன்றம்

Update: 2022-03-25 13:45 GMT

மேற்கு வங்கம் பிர்பூம் வன்முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் முதல்வர் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை சி.பி.ஐ'க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை பாக்டுய் இரண்டு கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வீடுகள் எரிந்து இரண்டு குழந்தைகள் 6 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் இந்த வன்முறையால் முதல்வர் மம்தாவுக்கு மேற்குவங்க ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவின. பிரதமர் மோடியும் பிர்பூம் வன்முறையை கண்டித்து அறிக்கை விடுத்தார்.


இந்த நிலையில் பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை சி.பி.ஐ'க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணையை மத்திய குழுவிடம் ஒப்படைக்க கூடாது என மம்தா கோரிக்கை விடுத்திருந்தார், இந்த நிலையில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை ஏப்ரல் 7'ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ'க்கு உத்தரவிட்டுள்ளது.


Source - Junior Vikatan

Similar News