"பால், பேருந்து கட்டணம் விலை உயர்வு" - அமைச்சர் கே.என்.நேரு அளித்த மழுப்பல் பதில்
"ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறும் பொழுது மக்கள் அதை சந்திப்பார்கள், இது வேண்டுமென்றே திணிப்பது அல்ல" என விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு மறுக்கும் விதமாக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறும் போது மக்கள் அதை சந்திப்பார்கள். இதை வேண்டுமென்றே திணிப்பதில்லை, தனியார் பால் கொள்முதல் செய்யும் பொழுது அவருக்கு கட்டுப்படி ஆகாத காரணத்தால் விலை ஏற்ற வேண்டும் என்கிறார்கள். அதிகாரிகள் ஊதிய உயர்வு கேட்கிறார்கள், அரசு எவ்வளவு மானியம் கொடுத்தாலும் செலவை ஈடுகட்ட முடியாது. இருந்தபோதும் விலையேற்றம் குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்" என மழுப்பும் விதமாக அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
பால் மற்றும் இதர பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது விலை உயர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் மழுப்பும் விதமாக பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் விலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றே அமைச்சரின் பதிலில் தெரிகிறது.