இந்து கோவில்கள், கிருஸ்துவ மிஷனரிகளுக்கு பாரபட்சமாக வழங்கப்படும் தீர்ப்புகள் - கிளம்பும் சலசலப்புகள்
ஒரே வகையான இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரு வேறு வகையான தீர்ப்பு கூறியுள்ளது. இந்து கோவில்களுக்கு ஒரு மாதிரியான தீர்ப்பையும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு வேறு மாதிரியான தீர்ப்பை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளையும், கருத்துக்களையும் வைத்து பார்க்கும்போது கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஆதரவான நடவடிக்கையையும், இந்துக்கள் கோவிலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் நினைத்து அச்சம் எழுந்துள்ளது.
ஒரே வாரத்தில் ஒரே மாதிரியான இரண்டு வழக்குகளை முடிவு செய்து உச்சநீதிமன்றம் இரண்டு வேறு வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளது. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்து இரு தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் பொழுது ஒரு வகையான தீர்ப்பு கிருஸ்துவ மிஷனரிகளுக்கு ஆதரவாகவும் மற்றொரு வகையான தீர்ப்பு இந்து கோவில்கள் மீதான எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து இந்து கோவில்களிலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலர் குழுவை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை மார்ச் 19'ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து அனைத்து இந்து கோவில்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், சமூக ஆர்வலர், பக்தர், தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் ஒரு பெண்ணை உறுப்பினர்களாகக் கொண்ட அறங்காவலர் குழுவை நியமிக்க கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிசம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் இதேபோன்ற நிவாரணம் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் உற்சாகமடைந்து கிறிஸ்தவ மிஷனரிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாரியம் அமைக்க வலியுறுத்தியும் 'இந்து தர்ம பரிஷத்' என்ற ஆர்வலர் குழு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்தது.