சேலம் ஆதம்பாஷாவின் ஏ.எம் பிரியாணி கடை தால்ச்சா'வில் புழு - புகார் அளித்த மாணவர்களை தூக்கி சென்ற காவல்துறையினர்

Update: 2022-03-30 06:30 GMT

சேலம் ஆதம்பாக்கம் பிரியாணி கடையில் தால்ச்சா'வில் புழு இருந்ததை சுட்டிக்காட்டிய வாடிக்கையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


சேலம் திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் ஆதம் பாஷா இவர் ஏ.எம் பிரியாணி எனும் பெயரில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் வைத்துள்ளார், இவரது கடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆதம் பாஷாவின் கடையில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர் மூவர், அப்பொழுது பிரியாணி'க்கு துணையாக பரிமாறும் தால்ச்சா'வில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர். அங்கு வந்த உணவுப் பாதுகாப்புத் துறையினர் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர், அந்த வேளையில் அங்கு வந்த காவல்துறையினர் புகார் சொன்னவர்களை அள்ளிக்கொண்டு போய் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மருத்துவர்களும், ஒரு மருத்துவ மாணவரும் அடக்கம்.


ஆனால் புகார் அளித்தவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என காவல்துறையினரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது, "புதுக்கோட்டையை சேர்ந்த பாஸ்கர், அரியலூர் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் பல் மருத்துவர்கள். இந்நிலையில் தனது நண்பருடன் ஏ.எம் பிரியாணி கடைக்கு சாப்பிட வந்துள்ளனர், அப்பொழுது தால்ச்சா'வில் புழு இருந்திருக்கிறது உடனே கடை மேலாளர் வினோத் என்பவருடன் புகார் சொல்லி இருக்கிறார்கள். அது வாக்குவாதமாக மாறி கோபமடைந்த மருத்துவ மாணவர் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் செல்போன் மூலம் புகார் அளித்துள்ளனர், மேலும் அவர்கள் கடை மேலாளர் வினோத்தை மிரட்டி பணம் கேட்பதாகவும் தெரிவதாக புகார் எழுந்துள்ளதாக காவல்துறையினரிடம் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். எனவே நாங்கள் வாடிக்கையாளர்களை கைது செய்தோம்" என காவல்துறையினர் தெரிவித்தனர்.


இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் கூறியதாவது, 'எனக்கு புகார் வந்தவுடன் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவலிங்கம் என்பவரை நேரில் அழைத்து விசாரிக்க சொன்னேன். அதில் பிரியாணிக்கு ஊற்றப்படும் தால்ச்சா'வில் புழு இருந்தது உண்மைதான் என தெரிய வந்தது' எனக் கூறினார்.


இதுகுறித்து கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மருத்துவ மாணவர்களின் பெற்றோரிடம் பேசிய பொழுது, "நாங்கள் நல்ல வசதியான குடும்பம்தான் அப்படி இருக்கும்போது எங்க பையன் எதுக்கு பணம் கேட்டு மிரட்டுபோறான்? இது முழுக்க முழுக்க பொய்! உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுத்ததால் இப்படி வேணும்னு ஜெயிலுக்கு அனுப்பி இருக்காங்க. அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர் நல்ல நெருக்கம் அவர் தலையீட்டின் பேரில் தான் எங்கள் பசங்க கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்றனர்.


இந்நிலையில் போலீசார் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதிகள், "படிக்கிற மாணவர்கள் மீது எப்படி வழக்குப் போட்டீங்க? இவங்களுக்கும் நடந்த சம்பவத்துக்கு சம்பந்தம் இல்லாம இருக்கிற மாதிரி இருக்கு" என போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். அதையடுத்து 6 பேரையும் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தினார்கள். பிரியாணிக்கு பயன்படுத்தும் தால்ச்சா'வில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் காரணமாக இருந்த மாணவர்கள் மீது உரிமையாளர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது போல் தெரிகிறது.


Sourc - Junior Vikatan

Tags:    

Similar News