பிற மதத்தினர் வசிக்கும் பகுதியில் மத பிரச்சாரம் செய்வதை தவிர்க்க வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்!
தமிழகத்தில் மத பிரச்சாரம் செய்வதை தவிர்க்குமாறு சிறுபான்மையினர் நல ஆணையர் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திடீரென்று அறிவுரை வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று (மார்ச் 30) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமைச்சர் மற்றும் ஆட்சியர் பங்கேற்றனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: சிறுபான்மை மக்களுக்கு உரிமை இருக்கின்றது போன்று கடமையும் உள்ளது. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களையும் வாழ வைக்க வேண்டும்.
மேலும், பிற சமூதாயத்தினருக்கு உதவிகளை செய்து மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது மட்டுமின்றி அரசாங்க நிலத்தில் சர்ச், மசூதிகளை கட்டிவிட்டு அரசிடம் அனுமதி கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது. முன்னரே முறையான அனுமதியை பெற்றுவிடுவது நல்லது. மேலும், மற்ற மதத்தினர் வாழும் பகுதிகளில் மத பிரச்சாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar