'வங்காள விரிகுடாவை நாம் பாலமாக அமைக்க வேண்டிய தருணம் இது' - பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி

Update: 2022-03-31 12:15 GMT

'வங்காளவிரிகுடா'வை பாலமாக அமைக்க வேண்டிய தருணம் இது' என பிம்ஸ்டெக் அமைப்பில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றியுளளார்.


இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய வங்கக்கடல் நாடுகள் இணைந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு 'பிம்ஸ்டெக்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் 'பிம்ஸ்டெக்' அமைப்பின் ஐந்தாவது மாநாடு இலங்கையில் நேற்று நடந்ததது, இதில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது கடந்த சில வாரங்களாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போது சர்வதேச சட்டங்கள், விதிகளின் 'ஸ்திரத்தன்மை' தன்மை கேள்வி எழுந்துள்ளது என்றார்.


மேலும் தொடர்ந்த அவர், "இந்த சூழ்நிலையில் நம்முடைய பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக நான் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது, நம்மிடையே இணைப்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வங்காள விரிகுடாவை பாலமாக அமைக்க வேண்டிய தருணம் இது. நம் பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்" எனவும் குறிப்பிட்டு பேசினார்.


'பிம்ஸ்டெக்' அமைப்பின் உள்ள பிற நாடுகளைவிட இந்தியா பரப்பளவிலும், மக்கள் தொகையும் வலிமையான நாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாடுகள் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தும், கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக வழிநடத்திச் சென்ற அவரின் திறமையையும் பின்பற்றுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source - Maalai Malar

Tags:    

Similar News