'சீனாட்ட போய் எல்லாத்தையும் வித்தீங்க, இப்ப அனுபவீங்க' - ராஜபக்சே அரசு மீது இலங்கை வியாபாரிகள் கொதிப்பு
'இலங்கை அரசாங்கம் சீனாவிடம் அனைத்தையும் பெற்றது, அதுவே மிகப்பெரிய பிரச்சனை சீனாவிடம் அனைத்தையும் விற்றதால் இலங்கையிடம் இன்று பணம் இல்லை' என இலங்கை வியாபாரிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது, இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களின் விலை பலமடங்கு ஏற்பட்டிருக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆகிய பொருள்களை சாதாரண மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வாங்குவதே தற்போது கடும் சவாலாக உள்ளது.
போராட்டத்துக்காக கிளம்பிய மக்களை ராணுவம் கொண்டு இலங்கை அரசாங்கம் தற்போது அடக்கி வருகிறது, எந்த நேரமும் கலவரம் வெடிக்கலாம் என்ற ஆபத்தான நிலையில் இலங்கை அரசு தத்தளித்து வருகிறது மற்றும் நாடுகள் உதவி புரிந்தாலும் இலங்கையை காப்பாற்ற முடியுமா என தெரியாத நிலையில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய ஊடகமொன்றிற்கு இலங்கை வியாபாரிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது, "இலங்கையில் ராஜபக்சே அரசு அனைத்தையும் சீனா அரசாங்கத்திடம் விற்று வருகிறது, அவ்வளவு ஏன் நாட்டில் எதுவும் இல்லை சீனாவிடம் இருந்து கடனாக எல்லாவற்றையும் வாங்கி உள்ளனர்.
தினமும் விலைவாசி அதிகரித்து வருகிறது, அரசிடம் பணம் எதுவும் இல்லை இலங்கை அரசாங்கம் சீனாவிடம் அனைத்தையும் விற்றது அதுவே பெரிய பிரச்னை. சீனாவிடம் அனைத்தையும் விற்றதால் இலங்கையிடம் பணம் இல்லை அதுவே மிகப்பெரிய பிரச்சனை. சீனாவிடம் அனைத்தையும் விற்றதால்தான் இலங்கையுடன் பணம் இல்லை, மற்ற நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது எங்களுக்கு வியாபாரம் எதுவுமில்லை. கோத்தபய ராஜபக்ஷே நல்ல தலைவர் இல்லை, அவர் பதவி விலக வேண்டுமென விரக்தியாக பேசியுள்ளார்.