ராமர் குறித்து விமர்சனம்: ராகுல் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!

Update: 2022-04-12 01:31 GMT

ராமர் அவதாரம் பற்றி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருப்பதற்கு பாஜக கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசும்போது, ராமர் பற்றி அவதூறான வகையில் கருத்து கூறியிருந்தார். அதாவது மறுபிறவியில் தனக்கு நம்பிக்கையில்லை ஆனால் பாஜக தலைவர் ஒருவர் ராமர் அவதரித்ததாக எப்படி நம்புகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ராகுலுக்கு அரசியல் சாசனத்திலும் நம்பிக்கையில்லை, நீதி துறையின் மேலும் நம்பிக்கையில்லை என்பதை இந்த பேச்சு உணர்த்துகிறது. ராமர் பற்றிய பேச்சு என்பது ராகுலின் விரக்தியின் உச்சத்தின் வெளிப்பாடு. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். தாய் சோனியாகாந்தி போன்று மகனும் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News