'தமிழகத்தில் மத்திய அரசின் ராணுவ தளவாட திட்டம்' - எல்.முருகன் கூறிய இனிப்பான செய்தி

twitter-grey
Update: 2022-04-16 11:45 GMT
தமிழகத்தில் மத்திய அரசின் ராணுவ தளவாட திட்டம் - எல்.முருகன் கூறிய இனிப்பான செய்தி

மத்திய அரசின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான ராணுவ தளவாட திட்டத்திற்கு தமிழகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சருடன் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மாவட்ட வளர்ச்சிப்பணிகள், மருத்துவ முகாம், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


அப்பொழுது அவர் கூறியதாவது, "முன்னேற விளையும் மாவட்டத்தின் கல்வி, விவசாயம், வளர்ச்சித் திட்டம், அடல் பென்சன், கிராம வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கு அடிப்படையாக கொண்டு மத்திய அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் கீழ் பல்வேறு துறைகள் முன்னேற்றம் கண்டுள்ளன மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.


"இந்தியா முழுவதும் முன்னேற விளையும் 112 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது இது விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த தமிழ் புத்தாண்டு பரிசாக பிரதமர் மோடி பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார்" என கூறினார். மேலும் 'மத்திய அரசின் திட்டங்களில் அதிகம் பயன்பெறும் மாநிலம் தமிழ்நாடுதான்' எனவும் தெரிவித்தார்.


அடுத்தபடியாக மத்திய அரசின் ராணுவ தளவாட பணிகள் குறித்து பேசிய அவர், "இலங்கையில் தற்பொழுது உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்பது குறித்து என்னால் பேச முடியாது, மத்திய அரசின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான ராணுவ தளவாட திட்டம் தமிழகத்துக்கும், உத்திரப்பிரதேசத்திற்கும் தான் முக்கியத்துவம் அளித்து வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.


Source - Junior Vikatan


Tags:    

Similar News