"ஆளுநர் நல்லவர்தான்!" - திடீரென ஆர்.என்.ரவியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
"தமிழக ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர்" என்று தமிழக ஆளுநர் ரவி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் புத்தாண்டையொட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கான தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை அரசியலாக்கி பல காரணங்கள் கூறி புறக்கணித்தனர். இதனால் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் பொது மக்களிடையே பல விமர்சனங்களை கண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது : நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
ஆளுநர் பழகுவதற்கு அதிகம் இனிமையானவர், இந்த ஆட்சியின் செயல்பாடுகளை ஆளுநர் பெரிதும் பாராட்டியுள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் சுமுகமான உறவு இருந்து வருகிறது. ஆளுனர் என்ற முறையில் அவருக்கு தகுந்த மரியாதை அளிப்போம்.
என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.