'தமிழ்நாட்டில் நீங்கள் எங்கும் ராமர் கோவிலை பார்க்க முடியாது' - விபரம் தெரியாமல் உளறிக் கொட்டிய ஜோதிமணி எம்.பி

Update: 2022-04-20 12:00 GMT

'நீங்கள் தமிழ்நாட்டில் யாரிடம் வேண்டுமானாலும் போய் கேட்டுப்பாருங்கள், தமிழ்நாட்டில் நீங்கள் எங்கும் ராமர் கோவிலை பார்க்க முடியாது' என கரூர் எம்.பி ஜோதிமணி விவரம் புரியாமல் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் டெல்லியில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் எம்.பிக்கள் கரூர் ஜோதிமணி வித்தியாசமானவர் அடிக்கடி பப்ளிசிட்டிக்காக ஏதாவது செய்கிறேன் என்ற பெயரில் கருத்து கூறுவதும் பின்னர் அதனை சமாளிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சி தி.மு.க'வினரே இவரின் பேச்சைக் கேட்டு இவரை வெளியில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது அந்த நிலையிலும் வெளியில் வந்து இவர் தி.மு.க கட்சியினருக்கு எதிராக சத்தமிட்டது அனைவரும் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொண்டனர்.


இந்நிலையில் டெல்லியில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அதில் எம்.பி ஜோதிமணி கூறியதாவது, "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக்கு ராமர் என்றால் யார் என தெரியாது, ஏனென்றால் நாங்கள் மூதாதையரை வழிபடும் முறையை பின்பற்றி வருகிறோம். நீங்கள் தமிழ்நாட்டில் யாரிடம் வேண்டுமானாலும் போய் கேட்டுப்பாருங்கள் நீங்கள் எங்கும் ராமர் கோவிலை பார்க்க முடியாது" என கூறியுள்ளார்.


எம்.பியாக இருந்து கொண்டே விவரம் புரியாமல் ஜோதிமணி இவ்வாறு கூறியது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது ராமர் இலங்கையில் இருந்து ராவண வதம் முடித்து திரும்பியவுடன் ஏற்பட்ட தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார் என்பது இந்து மத நம்பிக்கை அவ்வாறு ராமர் வழிபட்ட மிகப் பெரிய ஸ்தலம் ராமேஸ்வரம் தமிழகத்தில் இருக்கும் பொழுது, பல வைணவ ஸ்தலங்களில் ராமர் சந்நிதியும், வழிபாடும் இருக்கும் பொழுது நீங்கள் தமிழ்நாட்டில் ராமரை பார்க்கவே முடியாது என விபரம் அறியாமல் கூறும் ஜோதிமணி எப்படி எம்.பி'யாக உள்ளார் என்பது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.



Source - Oneindia.com

Tags:    

Similar News