ஆளுநர் கான்வாய் மீது கொடிகம்பம் எறிந்த வீடியோவை ஸ்டாலின் பார்த்தாரா இல்லையா! அண்ணாமலை ஆக்ரோஷ கேள்வி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்ரல் 19) தருமபுர ஆதீன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மயிலாடுதுறை சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி கட்டிய கம்புகளையும், கற்களையும் ஆளுநர் கான்வாய் மீது தூக்கி எறிந்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பாஜகவினர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக மற்றும் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.
"ஆளுநருக்கு கருப்புக்கொடி" - அண்ணாமலை ஆக்ரோஷ பேட்டி#Annamalai #Rnravi #TamilnaduGovernor #mayiladuthurai pic.twitter.com/rAwkkKdkSF
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 20, 2022
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆக்ரோஷமான பேட்டியை அளித்தார். அதாவது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்தான் ஆட்சி செய்கிறாரா அல்லது வேறு யாரேனும் இயக்குகிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநரின் கான்வாய் மீது கொடிகம்பம் மற்றும் கற்கள் வீசப்படவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். இவர் வீடியோவை பார்க்காமல் பேசி வருகின்றார். எனவே முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்று உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கருணாநிதி இருந்த காலத்தில் கருத்து வேறுபாடுதான் இருந்தது. ஆனால் இது போன்று சட்டம், ஒழுங்கு ஏற்பட்டதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu