காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் நியாயம் பெற்றுத்தருவாரா? - அண்ணாமலை
சென்னையில் காவல்துறை விசாரணையின்போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கினற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் காவல்துறை விசாரணையின்போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!
— K.Annamalai (@annamalai_k) April 20, 2022
அவருடைய உடலையும் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். @CMOTamilnadu கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா? pic.twitter.com/3fUBNb7VY0
சென்னை, புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர். அதன் பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஷ் 28, சுரேஷ் 28 என தெரியவந்துள்ளது. இதன்பின்னர் விக்னேஷீக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உறவினர்கள் கூறும்போது, போலீசார் தாக்கியதில் விக்னேஷ் உயிரிழந்துவிட்டார் என்று கூறினர். இந்த சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் காவல்துறை விசாரணையின்போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது! அவருடைய உடலையும் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். இது பற்றி தமிழக முதலமைச்சர் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா? என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Hindu Tamil