பிரிட்டிஷ் பிரதமரை கோலாகலமாக வரவேற்ற மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு இன்று புதுடெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடி அளித்த சம்பிரதாய வரவேற்ப்பை ஏற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அருமையான வரவேற்புக்கு நன்றி எனக் கூறினார், அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'இந்தியா-இங்கிலாந்து நட்புறவில் இது அற்புதமான நேரம், இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான மிகவும் நல்ல தருணமிது. இப்போது இருப்பதுபோல இதற்குமுன் எப்போதும் இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் நல்ல உறவுகள் இவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை என நான் நினைக்கிறேன்' என இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார். மேலும் 'பிரதம மந்திரிக்கு மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களை டெல்லிக்கு வரவேற்கிறோம்' என மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி இந்தியாவும் பிரிட்டனும் ஒரு பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான வர்த்தக திட்டங்களில் புதிய முதலீடுகளை செய்யவிருக்கின்றனர், மென்பொருள் துறையில் சுகாதாரம் வரை பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் செய்யும் முதலீடுகள் மூலம் பிரிட்டனில் 11,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக நேற்று குஜராத் வந்து சேர்ந்தபோது ஜான்சனை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சாரிய தேவேந்திரநாத் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற போரிஸ் ஜான்சன் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரராவ் அங்கு அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்.