'இந்தியாவை பாதிக்கும் பல விஷயங்கள் நடக்கின்றன' - ஏன் ராஜ்நாத் சிங் இப்படி கூறினார்?
'உலக ஒழுங்கு வேகமாக மாறி வருவதால், இந்தியா தனது தற்காப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னை பலப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார்.
இந்தியாவை பாதிக்கும் பல விஷயங்கள் உலகில் நடக்கின்றன என்று 'DefConnect 2.0' இன் தொடக்க விழாவில் ராஜ்நாத் சிங் கூறினார்.
'DefConnect 2.0' என்பது பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக ஸ்டார்ட்-அப்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படை பணியாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு நாள் நிகழ்வாகும். இதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, "ஏரோ இந்தியா 2021 (பிப்ரவரி 21) இல் நாங்கள் சந்தித்தபோது, அன்றிலிருந்து இன்றுவரை, உலகம் கணக்கிலோ அளவிடவோ முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஒவ்வொரு புதிய ஆபத்தும் முந்தையதை விட மிகவும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் இருக்கிறது" எண்டு பேசினார்.
"கோவிட் தூண்டப்பட்ட நெருக்கடியிலிருந்து நாங்கள் முழுமையாக மீளவில்லை, ஆனால் உலகம் இப்போது உக்ரேனிய மோதலின் பிரச்சினையை எதிர்கொள்கிறது," என்று அவர் கூறினார். காலப்போக்கில் உலக ஒழுங்கு மாறிக்கொண்டிருக்கும் விதத்தில், நம்மை வலுவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை' என்றார் அவர்.
இதற்கு முன்னரும் கூட, மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தடுமாற்றத்தை உலகம் கண்டுள்ளது எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
'இது தவிர, இந்தியாவை நிச்சயம் பாதிக்கும் பல விஷயங்கள் உலகில் நடக்கின்றன. எனவே, நமது தற்காப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாம் வலுவாக இருப்பது முக்கியம்,' என்றார். 'நம்மைப் பலப்படுத்திக்கொள்ள நாம் பல துறைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சீர்குலைக்கும் தொழில்நுட்பம் ஒரு முக்கியமான துறையாகும்,' என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் குறிப்பிட்டு கூறியதாவது 'பாதுகாப்பு தொழில்நுட்பம் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது நிச்சயமாக முக்கியம், ஆனால் பாதுகாப்பு தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்,'ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்ற நாடுகளைச் சென்றடைவதால், அதன் பயன்பாடு பயனற்றதாகிறது' எனவும் அவர் தெரிவித்தார்.